இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்சார கட்டணத்தில் 20% குறைப்பை இன்றைய நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கும் தொழில்துறைக்கும் ஓர் நம்பிக்கை ஊட்டும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.
எனினும், இதன் செயற்பாட்டை உறுதிப்படுத்த நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ அனுமதி தேவையாகும். நிதியமைச்சின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த புதிய கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் எப்போது இதை அமல்படுத்தப்படும் என்பதில் கவனம் திரும்பியுள்ளது.
Tags
இலங்கை