கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து சேருநுவரவில் விபத்து..

கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து சேருநுவரவில் விபத்து.

நேற்று இரவு 9 மணிக்கு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து சேருநுவர- கந்தளாய் பிரதான வீதியில் நள்ளிரவு 1 மணியளவில் விபத்துகுள்ளாகியது.

குறிப்பிடத்தக்க அதி சொகுசு பேருந்தானது காத்தான்குடி seena travels நிறுவனத்திற்குரியதாகும். மேலும் தெரிய வருவதாவது வடகிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னம்பிட்டி பிரதான பாலத்தினால் வெள்ளநீர் அதிகளவாக செல்வதன் காரணமாக குறிப்பிட்ட வீதியால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் மாற்று வழியாக சேருநுவர - கந்தளாய் வீதி பயன்படுத்தப்பட்ட நிலையில் சோமபுர பகுதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் இப்பேருந்தில் பயணித்த பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீட்பு பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Post a Comment

Previous Post Next Post