பொலன்னறுவையில் -சகோதரி கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கச்சென்ற தம்பிக்கு ஏற்பட்ட துயரம் - உடல் உறுப்புக்கள் தானம்

பொலன்னறுவையில் -சகோதரி கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கச்சென்ற தம்பிக்கு ஏற்பட்ட துயரம் - உடல் உறுப்புக்கள் தானம்


பொலன்னறுவையில் உள்ள தோபாவெவ வித்தியாலயத்தில் மாணவர் ஒருவன் மீது கால்பந்து கோல் வலையிலிருந்து இரும்புக் குழாய் ஒன்று தலையில் வீழ்ந்தமையால் அவர் உயிரிழந்துள்ளார்.

தனது மூத்த சகோதரி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியைக் காண சென்றிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில், ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் தேனுவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான புலமைப்பரிசில் தேர்வில் அதிக மதிப்பெண்களை குறித்த மாணவன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், மரணமான குறித்த மாணவனின் உடல், உறுப்புகளை தேவைப்படும் மற்றொரு பிள்ளைக்கு தானம் செய்ய அவரது பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post