தொலைபேசி விளையாட கொடுக்க மறுத்ததால் நாலாம் ஆண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

தொலைபேசி விளையாட கொடுக்க மறுத்ததால் நாலாம் ஆண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை .



கண்டி மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலவ்வத்தையை பகுதியைச் சேர்ந்த M.I. ஹாமித் அஹ்மத் என்பவரே இவ்வாறு   

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

ஸாஹிரா கல்லூரி தரம் 04 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த நான்காம் வகுப்பு மாணவன் தனது பெற்றோர் தனக்கு மொபைல் போன் விளையாட கொடுக்க மறுத்ததால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மொபைல் போன் அடிமையாதல்: இன்றைய குழந்தைகள் மொபைல் போன், வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பெற்றோரின் கவனக்குறைவு: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது இதுபோன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.

சமூக ஊடகங்களின் தாக்கம்: சமூக ஊடகங்களில் காணப்படும் பொருட்கள் குழந்தைகளின் மனதில் தவறான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

Post a Comment

Previous Post Next Post