வஞ்சகமாய் கொல்லப்பட்ட அபூபக்கர் ஸீஸி நேற்று இரவு முதல் மத்திய கிழக்கில் சமூக வலைத்தளங்களில் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வரும் செய்திதான் அபூபக்கர் ஸீஸீ அவர்களின் கொலைச் செய்தியாகும். இவர் ஒரு இளைஞர். வயது 22. அபூபக்கர் எனும் இந்த இளைஞர் மாலி நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஃபிரான்ஸில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 8:30 மணியளவில் அன்று பள்ளியைத் தூய்மை செய்வதற்காக முன்னரே பள்ளிவாசலுக்கு வந்துள்ளார். அப்போது இஸ்லாமிய வெறுப்பு நிறைந்த ஆலிவர் ஹாட்சோவிக் (வயது 20) என்ற பெயருடைய ஒரு கிறித்தவ இளைஞர் அபூபக்கர் அவர்களிடம் வந்து தான் இஸ்லாத்தை அறிய விரும்புவதாகவும் தொழுகை முறையை தமக்கு தொழுதுகாட்டுமாறும் வேண்டியுள்ளார். அவருக்காக அபூபக்கர் அவர்கள் அவரை தமக்கு அருகில் நிறுத்தி தொழுது காட்டியுள்ளார். அவர் ஸஜ்தா நிலைக்கு செல்வதை எதிர்பார்த்திருந்த அந்த இளைஞர் அவர் ஸஜ்தாவிற்குச் செல்லும் போது தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை இருபது முறை குத்தியுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து அவரை அதிகமுறை கத்தியால் குத்தினார். அபூபக்கர் அவர்கள் மரணித்து விட்டார் என்பதை உறுதி செய்து அதை தமது மொபைலில் படமெடுத்துக் கொண்டார். இவை அனைத்துமே பள்ளிவாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பாவியான அபூபக்கர் அவர்களைக் கொலைசெய்த இந்த இளைஞரை தீவிரவாதி என்றோ அல்லது பயங்கரவாதி என்றோ எந்த ஐரோப்பிய அல்லது மேற்கத்திய ஊடகங்களும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற ஒரு செயலை ஒரு முஸ்லிம் செய்திருந்தால் இன்று உலகம் முழுவதும் அது தலைப்புச் செய்தியாக்கி ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயம் மீதும் தீவிரவாத முத்திரைகுத்தப்பட்டிருக்கும். வஞ்சகத்தால் கொல்லப்பட்ட அபூபக்கர் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக. அவரது பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுன்னத்தை அவருக்குப் பரிசளிப்பானாக